×

மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து

திருச்செங்கோடு, மே 7: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி படிப்பை முடித்து, கல்லூரி படிப்புக்கு மிகவும் ஆர்வத்துடன் செல்ல இருக்கும் மாணவ செல்வங்கள் அனைவரும், அவர்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்ந்தெடுத்து, அதில் முழு ஈடுபாட்டுடன் படித்து, தங்களது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வாய்ப்பு தவறவிட்டவர்களும், தளராமல் முயற்சிகளை தொடர வேண்டும். அடுத்தடுத்து வாய்ப்புகள் பல கொட்டி கிடக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக பயன்படுத்தி கொண்டு, தளராமல் முன்னேறி செல்ல வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Kongunadu People ,National ,Party ,General Secretary ,Easwaran ,MLA ,
× RELATED ₹22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்